மாவட்ட செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகை + "||" + Leader of the All India Congress Rahul Gandhi Visit Bangalore today

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகை
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(சனிக்கிழமை) பெங்களூரு வருகிறார். அவர், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடல் நடத்துகிறார்.
பெங்களூரு,

பிரான்சு நாட்டு்டன் மத்திய அரசு ேபாட்டுள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.


ஆனால் இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்்தி இன்று(சனிக்கிழமை) பெங்களூரு வருகிறார். தனி விமானம் மூலம் பகல் 12.30 மணிக்கு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார்.

அவர் அங்கிருந்து குமரகிருபா விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார். மேலும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, பெங்களூரு மின்ஸ் சதுக்கத்தில் எச்.ஏ.எல். நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்துகிறார். இதில் ரபேல் ஒப்பந்தம் குறித்து அவர் பேச உள்ளார். இந்த கலந்துரையாடல் திறந்தவெளியில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்களுடன் இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எச்.ஏ.எல். நிறுவனம் அனுமதி மறுத்துவிட்டது. ராகுல் காந்தியின் சிறப்பு பாதுகாப்பு படையினர், கலந்துரையாடல் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். பாதுகாப்பு காரணங்களால் அந்த இடம் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.