கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2018 4:45 AM IST (Updated: 18 Oct 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், முகமது மீரா, ஜெயபால், பாலகுமார், வேலுச்சாமி, நாகூர்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்ற வேண்டும், தொழிலாளர் உழைப்பை சுரண்ட அனுமதிக்கக்கூடாது, பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழிலாளர் விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும், முன்னணி நிறுவனங்களில் போராடும் தொழிலாளர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுத்துறையை அழிக்காமல் அமைப்பு சாரா நலவாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும், பணபலன்களை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


Next Story