ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 3:00 AM IST (Updated: 22 Oct 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி அரசு நிதி வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்தப்பட வேண்டும், நிர்வாக செலவினங்களுக்காக பயன்படுத்தக்கூடாது, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தையொட்டி தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும், நிலுவைத்தொகையுடன் ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும், கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் அந்தந்த பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு, துணைத்தலைவர்கள் சந்திரசேகர், ஞானசேகரன், தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் குபேரன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக 2, 3-வது பணிமனைகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பணிமனை செயலாளர் பிரபாதண்டபாணி அனைவரையும் வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாநில துணை செயலாளர் மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

இதில் தொ.மு.ச. ஓட்டுனர் செயலாளர் ராமலிங்கம், நடத்துனர் செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், ரவி, தொழில்நுட்ப செயலாளர் செல்வக்குமார், சி.ஐ.டி.யு. மத்திய சங்க செயலாளர் ராமமூர்த்தி, பணிமனை செயலாளர் இளம்பாரதி, தலைவர் பாலு, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி துணை பொதுச்செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் பலராமன், பணிமனை செயலாளர் அமர்நாத், ஐ.என்.டி.யு.சி. பணிமனை செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய இடங்களிலும் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story