அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பெண் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு


அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பெண் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 23 Oct 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு பெண் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் மகளிர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு எளிதில் செல்லவும், பல்வேறு பணிகளை விரைந்து செய்யவும் ஏதுவாக அவர்களுக்கு உதவும் வகையில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் (இவற்றில் எது குறைவோ அந்த தொகை) வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2017-18-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் பயன் பெறும் வகையில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பணிக்கு செல்லும் பெண் மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து கூடுதலாக பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் உயர்த்தி ரூ.31 ஆயிரத்து 250 என நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டது.

இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பணிக்கு செல்லும் பெண் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் வசிக்கும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகள், நகராட்சிகளில் விண்ணப்பித்து அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்ட வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story