நாகையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரி ஆய்வு


நாகையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:45 AM IST (Updated: 29 Oct 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்களை மொத்தமாக ஆர்டர் எடுத்து தயாரித்து விற்பனை செய்யும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செல்வராஜ் உத்தரவிட்டார். அதன்படி நாகை கடைத்தெருவில் செயல்பட்டு வரும் ஒரு உணவு தயாரிப்பு நிறுவனத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் ஆய்வு செய்தார்.

அப்போது பணியாளர்கள் சுகாதாரத்தை கடைபிடிக்கிறார்களா?, தலையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகிறார்களா?, இடம் தூய்மையாக உள்ளதா?, கழிவறை வசதி உள்ளதா? தயாரிப்பு மூலப்பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

Next Story