கரிக்கலாம்பாக்கத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்

கரிக்கலாம்பாக்கத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.
நெட்டப்பாக்கம்,
மத்திய அரசும், புதுச்சேரி மாநில திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை முகாம் கரிக்கலாம்பாக்கம் யுனிக் பயிற்சி மையத்தில் நடந்தது. முகாமுக்கு தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தலைமை தாங்கினார். யுனிக் பயிற்சி மைய நிறுவனர் தியாகராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பயிற்சி மையத்தினை தொடங்கிவைத்தார்.
பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்களையும் அவர் வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குமரேசன், ஏம்பலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை ஆச்சார்யா கல்வி அறக்கட்டளை, யுனிக் புரோபஷனல் டிரெய்னிங் அகாடமி, தீபம் கல்வி அறக்கட்டளை மற்றும் சந்திரா என்டர்பிரைசஸ் பணியாளர்கள் செய்திருந்தனர். திறன் மேம்பாட்டுக்கழக இயக்குனர் சாரங்கராஜு நன்றி கூறினார்.

இப்பயிற்சி முகாமில் ஏம்பலம், உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம், மங்கலம், திருக்காஞ்சி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து இளைஞர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டு தையல் பயிற்சி, கணினி பழுதுபார்த்தல், செல்போன் பழுது பார்த்தல், கணக்கு நிர்வாகி, குளிர்சாதன எந்திரம் பழுது நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பித்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை ஆச்சார்யா கல்வி அறக்கட்டளை, யுனிக் புரோபஷனல் டிரெய்னிங் அகாடமி, தீபம் கல்வி அறக்கட்டளை மற்றும் சந்திரா என்டர்பிரைசஸ் பணியாளர்கள் செய்திருந்தனர். திறன் மேம்பாட்டுக்கழக இயக்குனர் சாரங்கராஜு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story