கொடைக்கானல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட திருப்பூர் தீயணைப்பு குழுவினர்


கொடைக்கானல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட திருப்பூர் தீயணைப்பு குழுவினர்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:46 AM IST (Updated: 18 Nov 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் மீட்பு பணியில், திருப்பூர் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதன்காரணமாக கொடைக் கானல் மலைப்பகுதியில் ஏராளமான மரங்கள் ரோட்டில் சரிந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு மீட்பு துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் விஜயசேகரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை மாவட்டம் முழுவதிலும் இருந்து 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மீட்பு குழுவினர் கொடைக்கானல் விரைந்தனர்.

மரம் அறுக்கும் நவீன எந்திரம் உள்ளிட்டவற்றுடன் அந்த குழுவினர் ரோட்டில் விழுந்த மரங்களை நள்ளிரவு முதல் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் மலைப்பகுதி, பண்ணைக்காடு பிரிவு, பெருமாள் மலை, பேச்சிப்பாறை, தம்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றி வாகனங்கள் செல்வதற்கு வழியை ஏற்படுத்திக்கொடுத்தனர். நேற்று மதியம் வரை 100-க்கும் மேற்பட்ட மரங்களை இந்த குழுவினர் வெட்டி அகற்றியதாக தெரிவித்தனர்.

Next Story