வானவில் : மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 9 அறிமுகம்


வானவில் : மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 9 அறிமுகம்
x
தினத்தந்தி 21 Nov 2018 7:39 AM GMT (Updated: 21 Nov 2018 7:39 AM GMT)

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ் 9 என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.13.99 லட்சமாகும்.

இது எஸ்11 மாடலை விட விலை குறைவாக இருந்தாலும் அதில் உள்ள சிறப்பம்சங்கள் எதுவும் இதில் குறையவில்லை.

இதில் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உள்ளது. இது 140 ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தும். 6 கியர்களும் கொண்டது. நான்கு வீல் டிரைவ் வசதியும் கொண்டது. இந்த வசதி அதன் முன்னணி மாடலான எஸ் 11 மாடலில் மட்டுமே இருந்தது. தற்போது எஸ்-9 மாடலிலும் இந்த வசதியை புகுத்தியுள்ளது மஹிந்திரா.

இதன் உட்புறத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல், இரட்டை ஏர் பேக், ஏ.பி.எஸ். , புரொஜெக்டர் முகப்பு விளக்கு, 5.9 அங்குல தொடு திரை நேவிகேஷன் போன்ற வசதிகள் இதில் உள்ளன. ஓ.ஆர்.வி.எம். வசதி மற்றும் திருப்பும் முன்பான இன்டிகேட்டர் வசதி, ஆடியோ, குரூயிஸ் கண்ட்ரோல் பொத்தான் உள்ளிட்டவை ஸ்டீரிங் வீலில் உள்ளன.

இது டாடா ஹெக்ஸாவுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இம்மாத இறுதியில் மற்றொரு புதிய மாடலை (அல்டுராஸ்) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

Next Story