பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவு

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்து உள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் சைல்டு லைன் 1098 சார்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது;-
பாலியல் துன்புறுத்தலால்...
போலீஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் குழந்தை நேயத்துடன் செயல்பட்டு, அவர்களிடம் காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் நல அலுவலர் உள்ளனர்.
பாதிக்கப்படும் குழந்தைகள் போலீஸ் நிலையத்துக்கு சென்றுதான் புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சைல்டு லைன் 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கி வரும், “ஹலோ போலீஸ்“ 95141- 44100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல் அளிக்கலாம். இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பிற்காக சிறார் நீதி சட்டம் உள்ளது. பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை போலீசார் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விளக்கம்
பயிற்சியின் நோக்கம் குறித்து சைல்டு லைன் 1098 இயக்குனர் மன்னர் மன்னன் உரையாற்றினார். குழந்தைகள் பாதுகாப்பு, சிறார் நீதிசட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் சைல்டு லைன் பணியாளர் அருண்குமார் நன்றி கூறினார். இதில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story