மழையால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


மழையால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

மழையால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது மின்சாரம் பாய்ந்து திண்டிவனம் சேடன்குட்டை தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), விழுப்புரம் அருகே ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்த ராஜாங்கம்(50) ஆகியோரும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த லட்சுமி(67) என்பவரும் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இயற்கை இடர்பாடுகளின் கீழ் மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை நிவாரண உதவியாக வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார்கள் சையத்மெகமூத், பிரபுவெங்கடேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story