எந்திரம் சரிந்து விழுந்ததில் மேலாளர் சாவு
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், எந்திரம் சரிந்து விழுந்ததில் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் கவந்தம் கிராமத்தை சேர்ந்த ரகு (வயது 45) என்பவர் மேலாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ரகு மற்றும் ஊழியர்கள் அங்கு இருந்த எந்திரத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த எந்திரம் எதிர்பாராத விதமாக ரகு மீது சரிந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ரகுவை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story