கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் மன வேதனையில் இளம்பெண் தற்கொலை


கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் மன வேதனையில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் மன வேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் தமிழரசி (வயது 24) தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கஜா புயலின் போது விவசாய தோட்டத்தில் இருந்த தென்னை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததால் மிகுந்த மன வேதனையில் இருந்த தமிழரசி சம்பவத்தன்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தமிழரசி இறந்தார். இதுகுறித்து தமிழரசியின் அண்ணன் பரிமளம் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story