கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை புதிய குடிநீர் தொட்டி அமைக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க வலியுறுத்தி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க வலியுறுத்தி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய குடிநீர் தொட்டி விவகாரம்
கோவில்பட்டி ராமலிங்கம் தெருவில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டு, அதன் மீது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதனை அகற்றி விட்டு புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே அங்கு புதிய குடிநீர் தொட்டி அமைத்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி, தனிநபர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.
நகரசபை அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் ராமலிங்கம் தெருவில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம், நகரசபை ஆணையாளர் அட்சயா, என்ஜினீயர் கோவிந்தராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராமலிங்கம் தெருவில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story