காஞ்சீபுரத்தில் நல கொடி நாள் வசூல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் கொடி நாள் உண்டியல் வசூலை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
2017-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.2 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.4 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 324 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட பாடுபட்ட அனைத்து துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன். மேலும் 2018-ம் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 22 லட்சத்து 27 ஆயிரத்து 700 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை மிஞ்சும் வகையில் சீரிய முயற்சி எடுக்க வேண்டும். பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் மேஜர் ரூபா சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story