உடுமலையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் இரு கண்களையும் கட்டி கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடுமலை,
உடுமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 33 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்துக்கு உரிய சம்பளம், இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து உடுமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் இரு கண்களையும் கட்டி கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நித்தியானந்தன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள்.
Related Tags :
Next Story