தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி தற்கொலை


தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 12 Dec 2018 4:00 AM IST (Updated: 12 Dec 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஓரிக்கை தண்டவராயன் நகரை சேர்ந்தவர் மயில்நாதன் (வயது 32). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு டில்லிராணி (23) என்ற மனைவியும், பிரியதர்ஷினி(1½) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மயில்நாதன் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி டில்லிராணி, காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story