வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 3:00 AM IST (Updated: 19 Dec 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கோவில்பட்டி, 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கோவில்பட்டி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பூமாதேவி நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. சுந்தரராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலையில் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது சுந்தராஜ பெருமாள், நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுத்தார். திரளான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா‘ என்று பக்தி கோஷம் முழங்கியவாறு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

திருச்செந்தூர்

இதேபோன்று திருச்செந்தூர் ருக்மினி சத்யபாமா சமேத கிருஷ்ணர் கோவில், குலசேகரன்பட்டினம் விண்ணவரம் பெருமாள் சுவாமி கோவில், எட்டயபுரம் வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story