விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் அரசு ஊழியர் மனைவியிடம் 36 பவுன் நகை அபேஸ் 3 பெண்களுக்கு வலைவீச்சு
விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் அரசு ஊழியர் மனைவியிடம் 36 பவுன் நகைகளை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி,
விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் அரசு ஊழியர் மனைவியிடம் 36 பவுன் நகைகளை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலக ஊழியர்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கீதாஞ்சலி (வயது 30). இவருடைய தாயார் முத்துலட்சுமி, கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடந்த 12-ந்தேதி இரவில் கீதாஞ்சலி, வத்தலக்குண்டுவில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு வந்தார். அப்போது அவர் தனது துணிப்பையில் 36 பவுன் நகைகளை வைத்து இருந்தார்.
நகை அபேஸ்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பஸ்சில் ஏறிய 3 பெண்கள், கீதாஞ்சலியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து, அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள், கீதாஞ்சலியின் கவனத்தை திசை திருப்பி விட்டு, அவரது துணிப்பையில் இருந்த 36 பவுன் நகைகளை அபேஸ் செய்துள்ளனர். பின்னர் அந்த 3 பெண்களும் விருதுநகரில் பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர்.
கீதாஞ்சலி, கோவில்பட்டியில் உள்ள தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு சென்றதும், துணிப்பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அந்த 3 பெண்கள் தன்னுடைய கவனத்தை திசை திருப்பி நகைகளை அபேஸ் செய்தது அவருக்கு தெரியவந்தது.
3 பெண்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் நேற்று வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் அரசு ஊழியர் மனைவியிடம் நகைகளை அபேஸ் செய்த 3 பெண்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story