காஞ்சீபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் ரூ.50 ஆயிரம் அபராதம்


காஞ்சீபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. அதையொட்டி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன் மேற்பார்வையில், காஞ்சீபுரம் நகராட்சி நகர் நல அதிகாரி முத்து தலைமையில் சுகாதார குழுவினர், காஞ்சீபுரம் மேட்டுத்தெருவில் இயங்கும் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதற்கு அபராதமாக ரூ.50 ஆயிரத்தை நகராட்சி நகர் நல அதிகாரி முத்து விதித்தார். மேலும் 2 நாட்களுக்குள் மாற்று பைகளை பயன்படுத்த சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு அவர் அறிவுரை வழங்கினார்.

Next Story