விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார்


விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 24 Dec 2018 3:00 AM IST (Updated: 24 Dec 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாற்றுத்திறனாளி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தை அடுத்துள்ள பி.சி.காலனி பின்புறம் காட்டுப் பகுதியில் நேற்று காலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு கை இல்லாத ஆண் மாற்றுத்திறனாளி இறந்த நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நாகலாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகாதேவி தலைமையில் போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றனர். இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இந்த சம்பவம் குறித்து நாகலாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரின் தலை மற்றும் முகம் பகுதிகளில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன. இதனால் அவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story