மெட்ரோ ரெயில் பணியின் போது ராட்சத கிரேன் ரோட்டில் சரிந்து விழுந்தது புனேயில் பரபரப்பு

புனேயில் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு இருந்த ராட்சத கிரேன் ரோட்டில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புனே,
புனேயில் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு இருந்த ராட்சத கிரேன் ரோட்டில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ரெயில் பணி
புனே - பிம்பிரி இடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் புனேயில் நடந்து வருகிறது. இதில் நாசிக்பாட்டா நெடுஞ்சாலையில் 31 ராட்சத கான்கிரிட் தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ராட்சத கிரேன்கள் அங்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அங்கு பணி நடந்து வந்த போது திடீரென ராட்சத கிரேன் ஒன்று சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
உயிர்ச்சேதம் தவிர்ப்பு
அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் எதுவும் அந்த வழியாக வரவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தநிலையில் ராட்சத கிரேன் விழுந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோமீட்டர் நீளத்திற்கு அந்த பகுதியில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த மெட்ரோ அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் அந்த வழியாக செல்ல இருந்த வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இதையடுத்து மெட்ரோ அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் சரிந்து விழுந்த ராட்சத கிரேனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story