வானவில்: பாரகன் குக் டாப்
சமையலை எளிதாக்க பலவித நவீன சாதனங்கள் வந்துள்ளன. அத்தகைய ஸ்மார்ட் சமையலறையின் புதிய வரவுதான் பாரகன் குக் டாப். இது பார்ப்பதற்கே அழகாக வட்ட வடிவில் நான்கு கால்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருபகுதியில் இதன் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதாவது ஆன், ஆப் மற்றும் வெப்ப நிலையைக் கூட்டவும் குறைக்கவுமான பொத்தான்கள் உள்ளன. அனைத்துமே பெதர் டச் எனப்படும் இலகு ரக அழுத்தலில் செயல்படக்கூடியவை. ஆனால் இவற்றுக்கெல்லாம் மேலாக இதை ஸ்மார்ட்போன் மூலமும் செயல்படுத்த முடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சமே.
அதிகபட்ச சூட்டை தாங்கக்கூடிய சிலிக்கான் ரப்பர் பான்டை இதை உங்கள் சமையல் பாத்திரத்தில் மாட்டிவிட்டு அதற்கு தேவைப்படும் வெப்ப நிலையை ஸ்மார்ட்போன் மூலம் நிர்ணயிக்கலாம். இதில் 1,200 வாட்ஸ் இன்டக்ஷன் பர்னர் உள்ளது.
இதனால் உணவு விரைவில் தயாராகும். சிலிக்கான் ரப்பர் பான்ட் மூலமாக காந்த சக்தி நேரடியாக உஷ்ணமாக பரவுவதால் விரைவில் சூடாகும். அதேசமயம் இதை நம் கட்டுப்பாட்டிலும் வைக்க முடியும். இதை புளூடூத் மூலமும் செயல்படுத்த முடியும். பாத்திரத்தை திறந்தபடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான வெப்ப நிலையை பராமரிக்க இது உதவும். இதன் விலை 299 டாலர். இந்தியாவில் இதை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அமேசான் இணையதளம் உறுதியளிக்கிறது. ஸ்மார்ட் சமையலறைக்கு மெருகேற்ற விரும்புவோர் பாரகன் குக் டாப்பை தேர்வு செய்யலாம்.
Related Tags :
Next Story