நெல்லை அருகே மனுநீதி நாள் முகாமில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்


நெல்லை அருகே மனுநீதி நாள் முகாமில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:30 PM GMT (Updated: 9 Jan 2019 7:09 PM GMT)

நெல்லை அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் 241 மனுக்கள் பெறப்பட்டன. 82 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நெல்லை தாலுகாவை சேர்ந்த 3 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 3 பேருக்கு இலவச இஸ்திரி பெட்டி, 6 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், வேளாண்மைத்துறை மூலம் ஒரு விவசாயிக்கு விசை தெளிப்பான் கருவி ஆகியவை வழங்கப்பட்டன. மேற்கண்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக பணியாற்றியதையொட்டி, அவர்களுக்கு வாழ்த்து மடலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளார். அந்த மடலை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

முகாமில், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) மாறன், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்திய ஜோஸ், நெல்லை தாசில்தார் ஆவுடைநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story