நெல்லையில் 30 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


நெல்லையில் 30 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:00 PM GMT (Updated: 10 Jan 2019 6:59 PM GMT)

நெல்லையில் 30 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சியில் தற்போது 2018-19-ம் நிதி ஆண்டுக்கான தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சொத்து வரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த 2 நாட்களில் நெல்லை மாநகரில் வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத 30 குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

நெல்லை மண்டலத்தில் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இருந்த 6 வீடுகள், மேலப்பாளையம் மண்டலத்தில் 3 வீடுகள், பாளையங்கோட்டை மண்டலத்தில் 5 வீடுகள், தச்சநல்லூர் மண்டலத்தில் 16 வீடுகள் என மொத்தம் 30 வீடுகளில் குடிநீர் இணைப்பு கள் துண்டிக்கப்பட்டன.

மேலும் ஒவ்வொரு தெரு வாரியாக வரி பாக்கி, குடிநீர் கட்டண பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த பட்டியல் மூலம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொது மக்கள் உடனடியாக தங்களது கட்டிடங்களுக்கான வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை நிலுவை இன்றி உடனடியாக செலுத்தும்படி மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்து உள்ளார்.

Next Story