அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா


அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 12 Jan 2019 4:51 AM IST (Updated: 12 Jan 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பரணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

செந்துறை,

அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இதில் பேச்சுப்போட்டி, தவளை ஓட்டம், ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story