ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் சைக்கிள் பேரணி திருவாரூர் அருகே நடந்தது

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே திருக்காரவாசலில் அரசியல் கட்சியினரின் சைக்கிள் பேரணி நடந்தது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் தொடங்கி நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தினால் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசலில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். பேரணி திருக்காரவாசலில் தொடங்கி மாவூர், மாங்குடி, புலிவலம் வழியாக 15 கி.மீட்டர் தூரம் சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
இதில் மாவட்ட செயலாளர்கள் சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு), சுந்தரமூர்த்தி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), பாலச்சந்தர் (ம.தி.மு.க.), வடிவழகன் (விடுதலை சிறுத்தைகள்), தி.க. மாவட்ட தலைவர் மோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் தமீம்அன்சாரி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் காளிமுத்து, விவசாய தொழிலாளர் கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள்் தேவா, பாலசந்திரன், கலியபெருமாள், நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசையும், அதனை தடுக்க தவறிய தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜை நேரில் சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் 150 மனுக்களை அளித்தனர்.
பின்னர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உணவு களஞ்சியமாக உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தியை அழிக்கும் நோக்கத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தினால் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

Related Tags :
Next Story