திருச்சிற்றம்பலம் பகுதியில் விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரண தொகை வழங்க வேண்டும்


திருச்சிற்றம்பலம் பகுதியில் விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரண தொகை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jan 2019 3:45 AM IST (Updated: 26 Jan 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் பகுதியில் விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் திருச்சிற்றம்பலம் பகுதி பெரும் பாதிப்புகளை சந்தித்தது. பல ஆயிரம் தென்னை மரங்கள் சாய்ந்தன. பலர் வீடுகளை இழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. அதன்படி ஓடு மற்றும் கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ. 10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. தற்சமயம் தென்னை மரங்களை இழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் திருச்சிற்றம்பலம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை பராமரிப்பதற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண தொகை பெரும் பாலானவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரின் பெயர்கள் விடுப்பட்டுள்ளது.

இது குறித்து நிவாரணம் கிடைக்காதவர்கள் அனைவரும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக மனு கொடுத்து உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் கஜா புயல் பாதிப்பு நிவாரண தொகையை விடுபட்டவர்களுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள்தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Next Story