வானவில்: அறிவுக்கு வேலை கொடுக்கும் ‘பிரில்லியன்ட்’

கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள உதவுகிறது ‘பிரில்லியன்ட்’ என்கிற செயலி.
வழக்கமான முறையில் கற்பிக்காமல் தேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டு எளிமையான, வேடிக்கையான முறைகளில் கற்பிக்கிறது இந்த செயலி.
இந்த காலத்து பிள்ளைகளின் பாடத்தில் எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு பெற்றோரும் தங்களது அறிவை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களில் ஆர்வம் இருப்பவர்களும் இந்த செயலியை முயற்சிக்கலாம்.
மாணவர்கள் இதைக் கொண்டு தினமும் பயிற்சி எடுத்தால் எந்த விதமான கேள்விகளையும் எளிதாக கையாளும் திறனை பெறுவார்கள். பரபரப்பான வாழ்க்கை முறையில் அதிக நேரம் செலவழிக்காமல் விரைவாக அதே சமயம் ஆர்வத்தை தூண்டும் வகையில் கற்க வைக்கிறது இந்த பிரில்லியன்ட் ஆப்.
இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக்கூடிய செயலியாகும்.
Related Tags :
Next Story