கொள்முதல் நிலையத்திற்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து சாவு + "||" + The farmer who fell on the paddy for the procurement fell down and died
கொள்முதல் நிலையத்திற்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து சாவு
திருக்குவளை அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வேளாங்கண்ணி,
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதேபோல கடந்த ஆண்டும் காலதாமதமாக ஜூலை மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர்.
இதற்கிடையில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை விவசாயிகள் கடன் வாங்கி காப்பாற்றி வந்தனர். தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த திருக்குவளை அருகே களத்திடல் கரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 55). விவசாயியான இவர், தனது வயலில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய மடப்புரம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொண்டு வந்தார். அங்கு உடனடியாக கொள்முதல் செய்யப்படாததால் தான் கொண்டு வந்த நெல்மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலேயே வைத்து விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கொள்முதல் நிலையத்திற்கு சுப்ரமணியன் வந்தார். அங்கு தனது நெல்லை விற்பனை செய்வதற்காக டோக்கன் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நெல்லை விற்பனை செய்ய காத்திருந்த சுப்ரமணியனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்ரமணியனை பரிசோதனை செய்தனர். அப்போது சுப்ரமணியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து சுப்ரமணியன் உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து திருக்குவளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கொள்முதல் செய்வதற்காக சென்ற விவசாயி, கொள்முதல் நிலையத்திலேயே சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.