வானவில் : தகவல் தரும் டேபிள் பேன்
குளிர்ந்த காற்றைத் தருவதோடு தகவலை வெளிப்படுத்தும் மெசேஜ் பேன் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 20 டாலர் ஆகும்.
இதில் உள்ள பிளேடுகளில் எல்.இ.டி. விளக்குகள் உள்ளன. இதற்கான ரிமோட் கண்ட்ரோலில் உங்களுக்கு பிடித்தமான வாசகத்தை தேர்வு செய்யலாம். இதில் வானவில்லைப் போன்று 7 நிறங்களில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகள் உள்ளன.
சிவப்பு, நீலம், பர்பிள், பச்சை, ஆரஞ்சு, இளம் ஊதா மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன. பேன் 6 அங்குல விசிறிகளைக் கொண்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கலாம். விரும்பிய பகுதிக்கு திருப்பிக் கொள்ளும் வசதி கொண்டது. குளிர்ந்த காற்றுடன் உற்சாகமூட்டும் வாசகங்கள் உங்கள் வாழ்வை வசந்தமாக்கும்.
Related Tags :
Next Story