மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு + "||" + Because they refused to marry The boy who tried to fire before the girl's father

திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு

திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு
தேவகோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சஞ்சய் குமார் (வயது 24). இவர் கடந்த 2015–ம் ஆண்டு தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பின்னர் காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு அவர்கள் கல்லூரி படிப்பை முடித்தனர். இதையடுத்து தான் காதலித்து வந்த அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு சஞ்சய்குமார் பல முறை முயற்சி செய்து வந்தாராம். மேலும் அவரது பெற்றோர் அந்த பெண் வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெண் தர மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் மனக் கவலையில் இருந்து வந்த சஞ்சய்குமார் நேற்று அந்த பெண்ணின் தந்தை நடத்தி வந்த கடைக்கு சென்று அந்த கடை முன்பு தனது காதலியுடன் நான் பேச வேண்டும் என்று கூறி, மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவரை தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சஞ்சய்குமார், அவரது பெற்றோர் மற்றும் அந்த பெண்ணின் பெற்றோர் ஆகியோரை வரவழைத்து அவர்களிடம் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சென்னிமலை அருகே பரபரப்பு கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னிமலை அருகே கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
3. லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு
லாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. ‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி, குன்னத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பாக கீழே அழைத்துவந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...