ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு வேலைக்கார பெண் கைது


ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு வேலைக்கார பெண் கைது
x
தினத்தந்தி 19 Feb 2019 3:28 AM IST (Updated: 19 Feb 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் ரூ.1½ லட்சம் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை கார் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அபய் திப்சே. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டில் உள்ள 3 பீரோக்கள் திறந்து கிடந்தன. அந்த பீரோக்களில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் காணாமல் போயிருந்தது.

அவர் போபால் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த திருட்டு நடந்து இருந்தது தெரியவந்தது.

வேலைக்கார பெண் கைது

இதுபற்றி வீட்டில் வேலை பார்த்து வரும் சாந்தாகுருசை சேர்ந்த வேலைக்கார பெண் லீனா லட்சுமண் மோரே(வயது48) என்பவரிடம் அவர் விசாரித்தார்.தனக்கு எதுவும் தெரியாது என வேலைக்கார பெண் கூறினார். இதையடுத்து, இந்த திருட்டு குறித்து கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் வேலைக்கார பெண் லீனா லட்சுமண் மோரே தான் பணத்தை திருடிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story