வானவில் : ‘ஜீயஸ்’ மின்சார பைக்


வானவில் : ‘ஜீயஸ்’ மின்சார பைக்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:09 PM IST (Updated: 20 Feb 2019 3:09 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவை சேர்ந்த கர்டிஸ் மோட்டார் சைக்கிள்ஸ் புதிதாக ஒரு பைக்கை அறிமுகப்படுத்த தயாராகி விட்டது. அதற்கான முன்பதிவுகளும் நடக்க தொடங்கி விட்டன.

ஜீயஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இது, ஒரு எலக்ட்ரிக் பைக் ஆகும். அதாவது இதனை செலுத்த பெட்ரோலோ, டீசலோ தேவையில்லை. முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடியது. தற்போது சந்தையில் இருக்கும் இ பைக்குகளில் ஜீயஸ் தான் தரத்தில் முதலிடம் பெரும் என்று தெரிவிக்கின்றனர் இதன் நிறுவனர்கள்.

அத்தனை கச்சிதமாக தோற்றத்திலும் திறனிலும் கவனம் செலுத்தி இதை உருவாக்கியுள்ளனர். இந்த பைக்கில் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் ஜீயஸ் பைக்குடைய மேல் பாகங்கள் வழக்கமான முறைப்படி வெல்டிங் செய்யப்படாமல் போல்ட்கள் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன. இதன் சீட் சிறியதாக இருக்கிறது. எரிபொருள் சேமிக்க டேங்க் இல்லாததால் மற்ற சாதாரண பைக்குகளை விட எடை குறைவாக இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளின் நிறை ( MASS ) முழுவதும் அடிப்பாகத்தில் இருப்பதால் அற்புதமான பாலன்ஸ் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.42,60,000 ஆகும்

Next Story