ஹூவாய் 5 ஜி ஸ்மார்ட் போன் ‘மேட் எக்ஸ்’


ஹூவாய் 5 ஜி ஸ்மார்ட் போன் ‘மேட் எக்ஸ்’
x
தினத்தந்தி 6 March 2019 3:06 PM IST (Updated: 6 March 2019 3:06 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹூவாய் நிறுவனம் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 5 ஜி தொழில்நுட்பத்தோடு ‘ஹூவாய் மேட் எக்ஸ்’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் இதுபோன்ற மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தியது. இந்நிலையில் ஹூவாய் நிறுவனம் இத்தகைய போனை அறிமுகப்படுத்தி தொழில்நுட்பத்தில் தங்களது திறனை பறைசாற்றியுள்ளது.

மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 8 அங்குலம் ஒலெட் டேப்லெட் டிஸ்பிளேயைக் கொண்டது. விரித்தால் டேப்லெட் போலவும், சாதாரண நிலையில் வழக்கமான ஸ்மார்ட்போனைப் போலவும் இதைப் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மடக்கினாலும் இதன் தடிமன் 11 மி.மீ அளவுக்கே உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

6.6 அங்குலம் கொண்ட திரை, ஹூவாய் கிரின் 980 பிராசஸர் உள்ளது. தடையற்ற பேச்சுக்கு நீடித்து நிற்கும் 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி பெரிதும் துணை நிற்கும். இதில் 5 ஜி தொழில்நுட்பம் உள்ளதால் விரைவான தொடர்பு, இணைப்பு கிடைக்கும். அத்துடன் இது இரட்டை சிம் கார்டுடன் வந்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் ஹூவாய் நானோ நினைவகக் கார்டையும் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. இதில் 55 வாட்ஸ் சூப்பர் சார்ஜர் இருப்பதால் இது ஆப்பிள் ஸ்மார்ட்போனை விட அதிக வேகமாக சார்ஜ் ஆகிவிடும். இதன் பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளன.

Next Story