திருத்தணி, ஊத்துக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருத்தணி, ஊத்துக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
திருத்தணி,
திருத்தணி நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. பஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் அரக்கோணம் எம்.பி., கோ.அரி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கினார்.
இதில், நகராட்சி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன், கூட்டுறவு விவசாயிகள் சங்க தலைவர் ஜெயசேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். திருத்தணி ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற முகாமில், ரோட்டரி சங்க தலைவர் கவாஸ்கர் கலந்து கொண்டார்.
இதே போல் ஊத்துக்கோட்டையிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. இதை ரெட் கிராஸ் சொசைட்டியை சேர்ந்த கவுஸ்பாஷா தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார். நிகழ்ச்சியில் சப்–கலெக்டர் ரத்னா, குடும்ப நலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.