‘‘சரத்பவார் எழுதி கொடுப்பதை ராஜ் தாக்கரே பேசுகிறார்’’ முதல்-மந்திரி பட்னாவிஸ் பதிலடி


‘‘சரத்பவார் எழுதி கொடுப்பதை ராஜ் தாக்கரே பேசுகிறார்’’ முதல்-மந்திரி பட்னாவிஸ் பதிலடி
x
தினத்தந்தி 11 March 2019 5:30 AM IST (Updated: 11 March 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் எழுதி கொடுப்பதை ராஜ் தாக்கரே பேசுகிறார் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

சரத்பவார் எழுதி கொடுப்பதை ராஜ் தாக்கரே பேசுகிறார் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பதிலடி

பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி கூட்டம் நேற்று சண்முகானந்தா அரங்கில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், புலவாமா தாக்குதல் குறித்து பா.ஜனதாவை விமர்சித்து பேசிய ராஜ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சரத்பவாரின் கிளி

பாராமதி (சரத்பவாரின் சொந்த ஊர்) எப்போதும் புதிய கிளியை தேடி கொண்டே இருக்கும். அவர்களால் (சரத்பவார்) சில விஷயங்களை பா.ஜனதாவிற்கு எதிராக பேச முடியாது. எனவே அவர்கள் பேச நினைப்பதை அந்த கிளியை வைத்து பேச வைப்பார்கள்.

அவர் (ராஜ் தாக்கரே) ஒரு நடிகராக அவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை அழகாக பேசுகிறார். தற்போது அவர் பேச வேண்டிய கருத்துக்கள் பாராமதியில் இருந்து வருகிறது.

இவ்வாறு முதல்-மந்திரி பேசினார்.

Next Story