கிருஷ்ணகிரியில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே ஆய்வு


கிருஷ்ணகிரியில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே ஆய்வு
x
தினத்தந்தி 28 March 2019 4:45 AM IST (Updated: 28 March 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி இந்திய தேர்தல் பொது பார்வையாளராக ராம்ராவ் போன்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கிருஷ்ணகிரிக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் குறித்த சந்தேகங்களை 6369271353 என்ற தேர்தல் பொது பார்வையாளரின் செல்போன் எண்ணிற்கும், பார்வையாளரின் உதவியாளர் விஜய்குமாரின் 9442204491 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பொது பார்வையாளரை அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தினமும் சூளகிரி பவர்கிரீடு தங்கும் விடுதியில் காலை 11 மணி முதல் 12 மணி வரையில் நேரில் சந்திக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணக்கீட்டு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, ஊடக மையம் மற்றும் ஊடக சான்று மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கணக்கீட்டு குழு மேற்கொண்டு வரும் வேட்பாளர்களின் நிழல் பதிவேடு, செலவின ஆவணம், நிலையான குழு கண்காணித்து வரும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கூட்டங்கள், பதிவு செய்யப்பட்ட வீடியோ, வேட்பாளர்கள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினம், அனுமதிக்கப்படாத கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்த விவரங்களை கேட்டார். தொடர்ந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்புக்குழு, நிலையான கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களின் பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், இம்மிடிநாயக்கனப்பள்ளி, சாமல்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான சாய்வு தளம், குடிநீர், கழிப்பறை வசதிகள், மின் விளக்கு வசதி ஆகியவற்றை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சூளகிரியில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ஆய்வு செய்ததையும், அத்திமுகம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆய்வு செய்ததையும் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் உடன் இருந்தார்.

Next Story