நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துண்டுபிரசுரம் வினியோகம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தார்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.தேன்மொழிசேகர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நாகையகவுண்டன்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, ராஜதானி கோட்டை, பொன்னம்பட்டி, தர்மபுரி, அம்மாபட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும் துண்டுபிரசுரமும் வினியோகம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேன்மொழி சேகருக்கு இரட்டை இலை சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்திலும் வாக்களியுங்கள்’ என்றார்.
இந்த பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், ஒன்றிய செயலாளர் யாகப்பன், பேரூர் கழக செயலாளர்கள் சேகர், தண்டபாணி, நிலக்கோட்டை வீட்டு வசதி கடன் சங்க தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேன்மொழிசேகருக்கு ஆதரவாக திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் நிலக்கோட்டை மெயின் பஜார், நால்ரோடு, பஸ் நிலையம், பெரிய காளியம்மன் கோவில் பகுதி, அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேன்மொழிசேகர், ஏற்கனவே நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளார். மேலும் சட்டசபையில் நிலக்கோட்டை தொகுதி வளர்ச்சிக்காக எப்போதும் குரல் கொடுப்பார்’ என்றார்.
Related Tags :
Next Story