பட்டிவீரன்பட்டி பகுதியில், ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்பனை


பட்டிவீரன்பட்டி பகுதியில், ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 April 2019 5:00 AM IST (Updated: 3 April 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்டிவீரன்பட்டி,

பருவமழை பொய்த்து போனதால் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. விவசாயம் பொய்த்து விட்டது. தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக பட்டிவீரன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி, கதிர்நாயக்கன்பட்டி, தேவரப்பன்பட்டி, வினோபாஜி நகர், சின்னகவுண்டன்பட்டி, அய்யன்கோட்டை, புதூர், காலனி உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 70 சதவீத ஆழ்துளை கிணறுகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது பட்டிவீரன்பட்டி பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்ற னர்.இதற்கிடையே அன்றாட தேவைக்கு டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர், ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே பட்டிவீரன்பட்டி பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உள்ளாட்சி அமைப்புகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story