வானவில் : கேனன் ஐ.வி. கிளிக் கேமர

கேமராக்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது கேனன் நிறுவனமாகும்.
செல்போனை கொண்டு புகைப்படங்கள் எடுப்பது பலருக்கும் கைவந்த கலையாக மாறிவிட்டது. இதனால் கேமராக்களின் உபயோகம் குறைந்தாலும், சில முக்கியமான தருணங்களை பதிவு செய்ய உதவுபவை கேமராக்கள்தான். அந்த வகையில் கேமராக்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது கேனன் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் கையடக்கமான கேமரா மற்றும் பிரிண்டரை உருவாக்கியுள்ளது. இதனால் நீங்கள் எடுக்கும் படங்களை உடனே தத்ரூபமாக புகைப்படமாக பார்க்கும் வசதி இதில் உள்ளது. போலராய்டு மற்றும் இன்ஸ்டன்ட் பிரிண்ட் கேமராக்கள் அளவில் மிகவும் பெரியதாக உள்ளன.
ஆனால் கேனன் உருவாக்கி உள்ள கிளிக் கேமரா உங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் அளவுக்கு உள்ளது. புகைப்படத்துக்கு இதில் ஜிங்க் காகிதங்களை உபயோகித்தால் உடனடி படங்களை நீங்கள் பார்க்க முடியும். இவை 2 X 2 மற்றும் 2 X 3 அளவுகளில் கிடைக்கும். மிரர்லெஸ் கேமரா அறிமுகத்தைத் தொடர்ந்து இப்போது கிளிக் ரக கேமராக்களை கேனன் அறிமுகம் செய்துள்ளது. கேனன் ஐ.வி. கிளிக் மற்றும் ஐ.வி. கிளிக் பிளஸ் என இரு மாடல்கள் வெளிவந்துள்ளன.
கிளிக் மாடல் விலை ரூ.6,900. கிளிக் பிளஸ் விலை ரூ.11,000. இதில் 5 மெகா பிக்ஸெல் சென்சார் உள்ளது. இதில் செல்பி படங்களும் எடுக்க முடியும். இதன் நினைவகத் திறனையும் விரிவாக்கம் செய்யும் வகையில் மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி கொண்டது. இதன் காரணமாக இது முந்தைய செட்டிங் நிலைக்கு சென்றுவிடும்.
இதில் செல்ப் டயோக்னாசிஸ் எனும் செயல்பாட்டு வசதி இருப்பதால் டிஸ்பிளேயில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதை இது சரி செய்யும். அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வீடுகளில் ஏ.சி. பொருத்த நினைப்போர் அறிமுக சலுகையாக குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சான்யோ ஏ.சி. வாங்குவது குறித்தும் பரிசீலிக்கலாம்.
Related Tags :
Next Story