மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: 25 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் + "||" + Voter turnaround: wait for 25 minutes and wait for Minister OM

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: 25 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: 25 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் 25 நிமிடங்கள் காத்திருந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்களித்தார்.
வேதாரண்யம்,

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வேதாரண்யம் தாலுகாவில் உள்ள தலைஞாயிறு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.


அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பூத்சிலிப்பை காண்பித்து தனது கை விரலில் மை வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்க முயன்றார். ஆனால் வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. அந்த எந்திரத்தை இயக்க வேண்டிய அதிகாரி, தவறுதலாக வேறு பட்டனை அழுத்தி விட்டதால் வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து வாக்குச்சாவடிக்கு உள்ளேயே அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பழுதான வாக்குப்பதிவு எந்திரத்தை அலுவலர்கள் சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் சரிசெய்ய முடியவில்லை. தகவல் அறிந்து கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான ராஜூ அங்கு வந்து வாக்குப்பதிவு எந்திரத்தை சரி செய்தார்.

இதனால் 25 நிமிடங்கள் காத்திருந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்களித்தார். அதன் பின்னர் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதேபோல் கரியாப்பட்டினம், மணக்குடி, செட்டிபுலம், குரவப்புலம், புத்தூர் உம்பளசேரி, புஷ்பவனம், வேதாரண்யம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

அண்ணாபேட்டை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த முதியவரின் ஓட்டை அங்குள்ள தேர்தல் அதிகாரி உப்பிலி ஆராஅமுதன் மாற்றி போட்டு விட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தியில் இருந்த வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றியதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு புதிதாக 825 மின்சார பஸ்கள் வாங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்துக்கு புதிதாக 825 மின்சார பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் தங்கமணி பேட்டி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
3. பொறாமையால் முதல்-அமைச்சர் மீது விமர்சனம்: மக்களின் நலன் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை அமைச்சர் பேட்டி
பொறாமையால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்வதாகவும், மக்களின் நலன் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் சேலத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
4. தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் அன்னதானக்கூடம் அமைச்சர் திறந்து வைத்தார்
தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் அன்னதானக்கூடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
5. 2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.