வேலூரில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்


வேலூரில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 April 2019 3:15 AM IST (Updated: 21 April 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர், 

ஏசுவை சிலுவையில் அறைந்த தினம் புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஏசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை வேலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு கூட்டு திருப்பலி, ஆராதனை, பிரார்த்தனை நடந்தது.

தவக்காலத்தில் விரதம் இருந்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து, விருந்துண்டு மகிழ்ந்தனர். நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

வேலூர் கோட்டை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம், விண்ணரசி மாதா தேவாலயம், ஓல்டுடவுனில் உள்ள ஆரோக்கியமாதா தேவாலயம், சத்துவாச்சாரியில் உள்ள சூசையப்பர் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு கூட்டு திருப்பலி, ஆராதனை, பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.

குடியாத்தம் புதிய பஸ்நிலை யம் அருகில் உள்ள நல்மேய்ப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை முதல் சிறப்பு ஆராதனைகள் ஆயர் ரஜினிபிரசன்னா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆராதனைகளில் ஆயர் சைமன்ஷெபர்ட், பயிற்சி ஆயர் சித்தார்த், குருசேகர செயலர் சுதாசந்திரன், பொருளாளர் ஜெ.ஜெ.ஆனந்தகுமார் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story