பருவத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பருவத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2019 3:45 AM IST (Updated: 28 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

பருவத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் மண்மங்கலம் தாலுகா பெரியகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சேகர். மின்வாரிய அதிகாரி. இவரது மகள் ரத்னபிரபா (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கோடை விடுமுறையில் அவர் தனது வீட்டில் இருந்தார். இந்தநிலையில் பருவத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரத்னபிரபா குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் ரத்னபிரபாவை அவரது பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரத்னபிரபா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் ரத்னபிரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பருவத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story