கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் ரஞ்சித்(வயது 21). சம்பவத்தன்று இவர் தனது உறவினர்களான கருப்பையா(42), வைத்திலிங்கம் மனைவி யசோதை(53) ஆகியோருடன் ஒரு காரில் கடலூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு அதே காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை மரூர் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் சின்னையன்(23) என்பவர் ஓட்டினார்.
இவர்களது கார் ஈமூர்-விருகாவூர் சாலையில் எஸ்.ஒகையூர் பிரிவுசாலையில் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் சின்னையனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பையா, யசோதை, சின்னையன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 3 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story