வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்...


வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்...
x
தினத்தந்தி 8 May 2019 11:14 AM GMT (Updated: 2019-05-08T16:44:09+05:30)

1972 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் நல்ல நேரம்.

நல்ல நேரம்

நல்ல நேரம் படத்தில், கே.ஆர். விஜயா டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க எம்.ஜி.ஆர் பானெட்டில் உட்கார்ந்திருக்கும் இந்த புகைப்படம் அந்த காலத்தில் பல நாளிதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தது.

காரை நாயகி ஓட்டிவர பின்னால் யானைகள் ஊர்வலம் போலத் தொடர்ந்து வருவது வெகு அழகாக இருக்கும். எம்.ஜி.ஆர். ஸ்டைலாக அமர்ந்திருக்கும் இந்த கார் ஒரு செவ்ராலெட் இம்பலா காராகும். MRZ 2233 என்ற எண் கொண்ட இந்த வாகனம் திருவொற்றியூர் ராஜி நாயக்கர் என்பவருடைய காரேஜில் இப்போதும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது.

Next Story