வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் அனுமதி கலெக்டர் தகவல்


வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் அனுமதி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 May 2019 4:00 AM IST (Updated: 8 May 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.

சிவகங்கை,

நாடாளுமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

அதில் கலெக்டர் பேசியதாவது:– நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 23–ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பின்னர் தொகுதி வாரியாக அனைத்து வாக்கு பதிவு எந்திரங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படும். வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணுமிடத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவரின் கையொப்பம் இட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்கள். வேட்பாளர்கள் தங்களுக்குரிய முகவர்களுக்கான அடையாள அட்டையை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும். அடையாள அட்டை பெற்ற முகவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராமபிரதீபன், குமரன், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story