ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை 3 வாலிபர்கள் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 27), கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் (38) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கப்பாண்டி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஊருக்கு அருகே வல்லக்குளம் ரோட்டில் வந்தபோது, அங்கு சென்ற சுப்பிரமணியன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஊய்க்காட்டான் (21), சுந்தரம் (28), கார்த்திக் (27) ஆகியோர் தங்கப்பாண்டியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் மற்றும் சேரகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தங்கப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ஊய்க்காட்டான், சுந்தரம், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சுப்பிரமணியனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இறந்த தங்கப்பாண்டிக்கு வடிவு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story