சேலத்தில் கார் மோதி பெண் சாவு கணவர் கண்முன்னே பரிதாபம்


சேலத்தில் கார் மோதி பெண் சாவு கணவர் கண்முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:30 AM IST (Updated: 2 Jun 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கார் மோதியதில் கணவர் கண்முன்னேபெண்பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் பெரியமணலி அண்ணா நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 62). இவருடைய மனைவி சாந்தா (56). இவர்கள் நேற்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக வந்தனர்.

பின்னர் அவர்கள் கொண்டலாம்பட்டி-சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சாந்தா படுகாயமடைந்து கணவர் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சுகுமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த சாந்தா உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட போக்குவரத்து ெநரிசலை போலீார் சரிசெய்தனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் கார் டிரைவர் சுரேஷ் (37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story