வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்... ‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற கம்பீரமான கார்


வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்... ‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற கம்பீரமான கார்
x
தினத்தந்தி 5 Jun 2019 5:51 PM IST (Updated: 5 Jun 2019 5:51 PM IST)
t-max-icont-min-icon

2010-ம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ‘நீலவானம்’ பாடல் காட்சி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

எந்த திரைப்படத்திலும் இல்லாத வகையில் காட்சிகள் பின்னோக்கி செல்லும் படி அந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கும். அந்த அழகான காட்சியில் நாம் மூழ்கித் திளைத்திருக்கும் போது கமல் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகும். படத்தை பொறுத்தவரை, இது மிக முக்கியமான காட்சியாகும்.

இந்த காட்சியில் கமல் ஓட்டி வந்த கார் மீது இடிக்கும் கருப்பு நிறக் கார் ‘ஹம்மர்’ எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட காராகும். அந்த காரை ஓட்டி வந்தது நாயகி திரிஷா என்பது பின்பு தெரிய வரும்.

‘ஹம்மர்’ கார்கள் அமெரிக்கா நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். எஸ்.யு.வி. வகை காரான இது பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பதால் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.

Next Story