ஊத்தங்கரை பேரூராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் அறிவிப்பு

ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பெண்கள் போட்டியிடும் வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லாவி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பெண்கள் போட்டியிடும் வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பாரதிபுரம், 10-வது வார்டு நாராயணநகர் தெற்கு, எல்.ஐ.ஜி., குடியிருப்பு ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 6-வது வார்டு அம்பேத்கர் நகர், நேரு நகர், 13-வது வார்டு இந்திரா நகர் ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 4-வது வார்டு அண்ணா நகர் முதல் நகர் மற்றும் இரண்டாவது தெரு, 7-வது வார்டு பழைய கடைவீதி, கச்சேரி தெரு, காமராஜ் நகர் நடுதெரு, 8-வது வார்டு காந்திரோடு, செங்குந்தர் தெரு, அக்ரஹார தெரு, 9-வது வார்டு நாராயணநகர் வடக்கு, 11-வது வார்டு காமராஜ்நகர் கிழக்கு, 12-வது வார்டு காமராஜ்நகர் மேற்கு, ரெட்டியார் தோட்டம் ஆகிய வார்டுகள் பெண்கள் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வார்டுகளான 1-வது வார்டு எம்.ஜி.ஆர். நகர், வண்டிகாரன்கொட்டாய், தாண்டியப்பனூர், 3-வது வார்டு காந்திநகர், பனந்தோப்பு, கவர்னர்தோப்பு, நாட்டாண்மைகோட்டை, 5-வது வார்டு திருவண்ணாமலை மெயின்ரோடு, பேரூராட்சி சாலை, எம்.எஸ்.எம். தோட்டம், 14-வது வார்டு காமராஜ் நகர் கிழக்கு, அவ்வை நகர், 15-வது வார்டு சுண்ணாலம்பட்டி, காமராஜ் நகர், கலைஞர் நகர் ஆகிய வார்டுகள் பொது பிரிவினர் போட்டி யிடும் வார்டுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story